பெங்களூர் குண்டுவெடிப்பு: உண்மையான பைக் பரமத்திவேலூரில்!

தீவிரவாதிகள் குண்டு வைக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் பதிவு எண் டி.என். 22 ஆர் 3769 ஆகும்.
இது சென்னை மீனம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக பதிவு எண் ஆகும். எனவே மீனம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தமிழக க்யூ பிரிவு மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி பிரிவு போலீசார் மற்றும் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்தப் பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளை சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கரநாராயணனின் மகனான பெங்களூரில் வசிக்கும் சுந்தர் வாங்கி இருப்பது தெரிய வந்தது.
சாப்ட்வேர் என்ஜீனியரான சுந்தர் அமெரிக்கா சென்றதால் அந்த மோட்டார் சைக்கிளை சென்னையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு விற்றுள்ளார்.
இவர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைக்கு மாற்றலாகிச் சென்றார்.
சிறிது காலம் கரூரில் அந்த மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி வந்த அவர் கடந்த 2011ம் ஆண்டே நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சேடர் தெருவைச் சேர்ந்த தனியார் கல்லூரி நூலக உதவியாளர் கோபிநாத்திடம் விற்றுள்ளார். இப்போது இவர் தான் இந்த பைக்கை பயன்படுத்தி வருகிறார்.
இதையடுத்து கோபிநாத்திடமும் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசை திசை திருப்ப இந்த போலி பதிவு எண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் ஜெயப்பிரகாஷ் தற்போது தேனி அல்லி நகரத்தில் உள்ள கிளையில் பணியாற்றி வருகிறார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
குண்டு வைக்கப்பட்டிருந்த பைக் டிவிஎஸ் சுசூகி பைக் ஆகும். ஆனால், தமிழக பதிவு எண் கொண்ட பைக், யமாஹா ஆர்எக்ஸ் 135 பைக் ஆகும்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications