ராமேஸ்வரம்- சென்னைக்கு கோடை கால சிறப்பு ரயில்: வரும் 26ம் தேதி முதல்...
ராமநாதபுரம்: ராமேஸ்வரம்- சென்னைக்கு கோடை கால சிறப்பு ரயில் வருகிற 26-ந்தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்-சென்னை, சென்னை- ராமேஸ்வரம் இடையே, கோடைகாலத்தில் ஏற்படும் அதிகப்படியான கூட்ட நெரிசலை சமாளிக்கவும், வடமாநிலங்களிலிருந்து ராமேஸ்வரம் வரும் யாத்திரியர்கள் சிரமமின்றி ராமேஸ்வரம் வந்து செல்லவும் கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா மற்றும் வர்த்தக அமைப்புகள் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் இதுகுறித்து கோரிக்கை விடுத்தன.
சிறப்பு ரயில்கள்:
அதனை ஏற்று வரும் 26-ந்தேதி மே 10, 24, ஜூன் 7, 21 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்திலிருந்து காரைக்குடி, திருச்சி, விருத்தாச்சலம், செங்கல்பட்டு, சென்னை, எழும்பூர் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலின் எண் 06010 ஆகும்.
ராமேஸ்வரத்திலிருந்து...
ராமேஸ்வரத்திலிருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூருக்கு காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்று அடையும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஏப்ரல் 25, மே 9, 23, ஜூன் 6, 20 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூருக்கு இரவு 8 மணிக்கு வந்து சேரும்.
சென்னையிலிருந்து...
சென்னை எழும்பூரிலிருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக பரமக்குடிக்கு காலை 7 மணிக்கும், ராமநாதபுரத்திற்கு காலை 7.35 மணிக்கும், ராமேசுவரத்திற்கு காலை 8.45 மணிக்கு சென்று சேரும். இந்த ரயிலின் எண் 06009 ஆகும்.
நிற்கும் இடங்கள்:
இந்த ரயில்கள் கீழ்க்கண்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, செட்டிநாடு, தேவக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 11 படுக்கை வசதி பெட்டிகளும், 3 மூன்றடுக்கு ஏசி பெட்டிகளும், 2 இரண்டு அடுக்கு ஏசி பெட்டிகளும் உள்ளது. இந்த ரயிலுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications