இது கிச்சன், இது பாத்ரூம், இது பெட்ரூம்.. இது என்னாது.. அய்யோ பொணம்!

இந்த திகில் வீடு பார்க்கும் படலம் குறித்த விவரம்:
பெர்த் நகரைச் சேர்ந்த 18 வயதான ரிபெக்கா ஹேவர்ட் மற்றும் அவரது காதலர் இருவரும் ஒரு ஃபிளாட்டை வாடகைக்குப் பிடிக்க முடிவெடுத்து ஏஜென்ட் ஒருவரை அணுகினர். ஏஜென்ட்டும் பெர்த்தில் ஒரு ஃபிளாட்டுக்குக் கூட்டிச் சென்றார்.
வீட்டைத் திறந்து ஒவ்வொரு அறையாக காட்டினார்.தம்பதியினரும் ஆர்வத்தோடு பார்த்து வந்தனர். பெட்ரூம் கதவைத் திறந்து இதுதான் பெட்ரூம் என்று காட்டினார் ஏஜென்ட். ரிபெக்கா ஜோடியும் சந்தோஷத்துடன் பெட்ரூமை எட்டிப் பார்த்தது. பார்த்த வேகத்தில் இருவரும் அதிர்ச்சியில் பின்வாங்கினர். காரணம் அங்கே படுக்கையில் ஒரு பிணம் கிடந்ததே.
அது ஒரு ஆணின் பிணம். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்தனர். அந்த நபர் இறந்து நெடு நாட்களாகியிருக்கும் போல. உடல் அழுகிப் போயிருந்தது.
அந்த நபர் யார் என்று விசாரித்தபோது அவர் பிரேசில் நாட்டவர் என்று தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து ரிபெக்கா கூறுகையில், உள்ளே நுழைந்ததுமே அழுகிப் போன வாடை எங்களது நாசியைத் தாக்கியது. பிறகுதான் தெரிந்தது, அங்கு ஒரு ஆணின் பிணம் கிடந்தது. நாங்கள் அதிர்ச்சி அடைந்து விட்டோம். இதை எதிர்பார்க்கவில்லை என்றார்.
இதற்கிடையே, அந்த வீட்டை நிர்வகித்து வந்த அந்த ரியல் எஸ்டேட் ஏஜென்சி எப்படி இப்படி வீட்டுக்குள் ஒரு நபர் வந்து இறந்து கிடந்தது கூடத் தெரியாமல் அலட்சியமாக இருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications