அமெரிக்க ’அந்நியன்’ கர்டிஸ்!: விஷக் கடிதம் அனுப்பி சிக்கிய குற்றவாளி... சுவாரஸ்ய தகவல்கள்

இவர் தன்னை மறைந்த பாப் பாடகர் எல்விஸ் பிரஸ்லி என்று கூறி மோசடி செய்தவராம். அதேபோல அமெரிக்க அரசு தன்னை டுரோன்களை ஏவி உளவு பார்ப்பதாக கூறி வந்தாராம். மேலும் பல சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்டு வந்தவர் என்று அவரை அறிந்தவர்களும், கோர்ட் ஆவணங்களும் தெரிவிக்கின்றன.
விஷம் தடவிய கடிதங்களை அனுப்பிக் கைதான நபரின் பெயர் பால்கெவின் கர்டிஸ். 45 வயதாகும் இவர் நேற்று ஆக்ஸ்போர்ட் கோர்ட்டில் ஆஜர்படுத்தபப்பட்டார். அவரது வழக்கறிஞர் கிறிஸ்டி மெக்காய் வாதிடுகையில், தனது கட்சிக்காரர் இந்தக் குற்றத்தை 100 சதவீதம் செய்யவில்லை என்றார்.
மெம்பிஸ் அருகே புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டார் கர்டிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்டிஸ் ஒரு சர்ச்சைக்கிடமான ஆசாமி என்று அவனை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். முன்பு ஒருமுறை இவர் தன்னை எல்விஸ் பிரஸ்லி என்றுகூறி மோசடி செய்வதவராம். இவருக்கு லேசான மன நல பிரச்சினையும் இருந்து வருகிறதாம். தான் செய்வது என்ன என்று தெரியாமல் பலகாரியங்களைச் செய்வாராம். 10 வருடங்களுக்கு முன்பு கூட அவர் ஒரு வழக்கில் சிக்கினாராம்.
74 வயதான கர்டிஸின் தந்தை ஜேக்கூறுகையில், எனது மகனுக்கு இரு வேறுபட்ட மன நிலை உள்ளது. ஆனால்இதுவரை அவன் வன்முறையாக நடந்து கொண்டதில்லை. எனவேதான் அவன் கடிதங்களில் ரைசின் தடவி அதிபருக்கும், பிறருக்கும்க டிதம் அனுப்பினான் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. அவனுக்கு ரைசின் என்றால் என்ன என்றே தெரியாது. ஏன்,அது எங்கு கிடைக்கும் என்பது கூட தெரியாது என்றார் அவர்.
தன்னுடைய இணையதள பக்கத்தில் தன்னைப் பற்றி கர்டிஸ் கூறுகையில், தொழிலதிபர், புரட்சிவாதி, பாடகர், தொண்டர்,பாடலாசிரியர் என விதம் விதமாக வர்ணித்துள்ளார்.
2000ம் ஆண்டு முதல் இதுவரை அவர் 4 முறை கைது செய்யப்பட்டுள்ளாராம். இவர் இதற்கு முன்பு வசித்து வந்த பிரன்டிஸ் கவுண்டியின் ஷெரீப் ரான்டி டோலர் கூறுகையில், நான் ஷெரீப் ஆனது முதலே கர்டிஸைப் பார்த்து வருகிறேன். அவருக்கு இதுதான் வேலை. மிகவும் வினோதமான நபர் அவர். இம்முறை எல்லை தாண்டி விட்டார் என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications