'பாலியல் பலாத்கார' சம்பவங்களின் தலைநகர் டெல்லியா? 3 மாதத்தில் 393 புகார்கள்!!
டெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லி தற்போது பாலியல் பலாத்கார சம்பவங்களின் தலைநகராவும் உருவெடுத்திருக்கிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 393 பாலியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ராஜன்பகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், டெல்லியில் இந்த ஆண்டு ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து மார்ச் 31ந் தேதி வரை 393 பாலியல் குற்ற புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள. இம்மாதம் 14-ந் தேதி மேற்கு டெல்லி சுல்தான்புரியில் பேருந்துக்குள் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
15-ந் தேதி 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக மனோஜ்குமார் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 17-ம் தேதி கிழக்கு டெல்லியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மூன்று பேர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நாளில் கிழக்கு டெல்லி ஜகத்புரி பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி ஆசிரியர் பிரமோத் கைது செய்யப்பட்டார்.
18-ந் தேதி மேற்கு டெல்லி நஜஃப்கர் பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை 661 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 3 மாதங்களில் மட்டும் 393 பாலியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications