பிரதமர் பதவிக்கு மோடி தகுதியானவர்- 100% மதச்சார்பற்றவர்: ராம்ஜெத்மலானி

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்கக் கூடாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும் சிவசேனாவும் போர்க்கொடி தூக்கி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தகுதியானவரே என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்ஜெத்மலானி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மதசார்பற்றவர். நேர்மையானவர் நிர்வாக திறமைமிக்கவர். இதனால் பிரதமர் பதவிக்கு அவர் தகுதியானவர். பாரதிய ஜனதா கட்சியின் உயர்ந்த பதவிக்கு அவரே சிறந்தவர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை பாஜக அறிவிக்க வேண்டும். மக்களும் அதையே எதிர்பார்க்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிப்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். மோடியை எதிர்ப்பவர்கள் ஊழல் நிறைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தொடர வேண்டும் என்று விரும்புபவர்கள்.
மதவாதம் மற்றும் மதசார்பின்மை என்ற வார்த்தைகள் தற்போது தவறாக பயன்படுத்தப்படுகின்றன. தவறான புரிதல் அதன் அர்த்தம் மற்றும் முக்கியத்துவம் தெரியாமலேயே பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். நரேந்திரமோடி நமது நாட்டின் ஈடு இணையற்ற மதசார்பற்ற தலைவர் அவர் 100% மதசார்பற்றவர். தற்போது மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் பாஜகவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் பலன் அடையும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications