மதுவிலக்கு நடைபயணம்: வைகோவுக்கு நடிகர் செந்தில் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
தாராபுரம்: தமிழ்நாட்டில் மதுவிலக்கு கோரி நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவை நடிகர் செந்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மதுவினால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி தொடங்கி ஈரோடு வரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடைபயணம் 7வது நாளை எட்டியுள்ளது.
6ம் நாளான நேற்று தாராபுரத்தில் இருந்து வைகோ செல்லும்போது குளத்துப்பாளையம் அருகில் நடிகர் செந்தில் சந்தித்தார். அப்போது வைகோவின் உடன் நலன் பற்றியும் விசாரித்தார். நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அப்போது செந்திலிடம் பேசிய வைகோ, தங்களது காமெடி காட்சிகளை தான் விரும்பி பார்ப்பேன் என்று கூறியதோடு, வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். நடிகர் செந்தில் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications