ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாளு அம்மாள் கோர்ட்டில் ஆஜராக மாட்டார்?
சென்னை: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் அண்மையில் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சாட்சிகளின் பட்டியலில் தயாளு அம்மாளின் பெயரும் இருந்தது. அவர் வரும் 6-ந் தேதி டெல்லி நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் தயாளு அம்மாளின் உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கமாட்டார் என்று திமுக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 6 மாத காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் தயாளு அம்மாள் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை. அவரது மகன் மு.க.ஸ்டாலின் 60வது பிறந்த நாள் நிகழ்ச்சிமற்றும் கொள்ளு பேத்தி திருமணம் போன்றவற்றில் கூட தயாளு அம்மாள் கலந்து கொள்ளவில்லை.
இதனால் அவர் சாட்சியம் அளிக்க டெல்லி செல்ல மாட்டார். அவரது மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறோம் என்கின்றனர் திமுக வழக்கறிஞர்கள்.
இதே வழக்கில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த அமிர்தம் கடந்த மார்ச் 15ம் தேதி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சாட்சியமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications