சாலையோரம் கிடந்த மூட்டையில் வெடிகுண்டா?- நெல்லையில் பரபரப்பு
நெல்லை: நெல்லை அருகே சாலையோரம் கிடந்த மூட்டையில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள மேலப்பிள்ளையார்குளம் விலக்கில் சாலையோரத்தில 35 சாக்கு மூடைகள் கேட்பாரற்று கிடந்தன. வெகுநேரமாக மூட்டைகள் அந்த இடத்திலேயே கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏறப்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தாழையூத்து டிஎஸ்பி நடராஜன் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். போலீசார் மூட்டைகள் அருகே யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து விட்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து மூட்டைகளை பரிசோதித்ததில் அவைகளில் வெடிகுண்டு இல்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து மூட்டைகள் பிரித்து பார்த்ததில் அவைகளில் வெள்ளை நிற பவுடர் இருப்பது தெரிந்தது. அவைகளை பரிசோதித்து பார்த்ததில் அது போலி சிமிண்ட் என தெரிந்தது.
இதையடுத்து போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். போலி சிமிண்ட் என்பதால் அவற்றை சாலையோரத்தில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications