அமெரிக்க விருந்தில் ஒபாமாவை மீண்டும் சந்திக்கிறார் அமீர்கான்?

டைம் பத்திரிகை 2013ம் ஆண்டின் உலக அளவிலான 100 பிரபலங்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டிருந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் அமீர்கான், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்சேல் ஒபாமா, பாகிஸ்தானின் மலாலா ஆகியோரது பெயரும் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தொலைக்காட்சிகளில் நடத்திய சத்யமேவ ஜெயதேவுக்காக அமீர்கானை பிரபலங்களில் ஒருவராக டைம் இதழ் தேர்வு செய்திருக்கிறது.
டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்திருக்கும் பிரபலங்கள் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்த விருந்தில் அமீர்கானும் கலந்து கொள்ள இருக்கிறார், இதற்காக தற்போது அமீர்கான் நடித்து வரும் தூம்-3 படப் பிடிப்புக் குழுவினரிடம் 3 நாள் லீவ் கேட்டிருக்கிறார்.கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ஒபாமா வருகை தந்த போது அமீர்கான் அவரை சந்தித்துப் பேசினார். அப்போது அமீர்கானை அமெரிக்காவுக்கு அழைத்திருந்தார் ஒபாமா. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வருகை தந்திருந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேம்ரூனையும் அமீர்கான் சந்தித்துப் பேசியிருந்தார்.
தற்போது டைம் பத்திரிகை நடத்த இருக்கும் பிரபலங்கள் விருந்தில் கலந்து கொள்வதன் மூலம் ஒபாமாவை 2வது முறையாக ஆமீர்கான் சந்திக்க இருக்கிறார்.!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications