தாஜ்மஹால் அருகே ராணுவ குப்பையில் இருந்து குண்டுவெடித்தது: 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் தாஜ்கஞ்ச் பகுதியில் பழைய பொருட்கள் வைக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் ராணுவத்திடம் இருந்து வாங்கப்பட்ட பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி ராணுவத்திடம் இருந்து வாங்கப்பட்ட பொருட்களில் உலோகங்களில் இருந்து வெடிபொருட்களை பிரித்தெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வெடிபொருட்கள் வெடித்தன.
இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் ஒரு பெண் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்தவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த குண்டுவெடிப்பு நடந்த இடம் காதல் சின்னமான தாஜ்மஹால் இருக்கும் இடத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications