காற்றாலை மின்சாரத்தை முழுதாய் பயன்படுத்த மின் தொடர் பாதை:

இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில், மாநிலத்தின் தென் பகுதியில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்தும் விதத்தில் 2,300 கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறிலிருந்து சென்னைக்கு 1,488 சுற்று கிலோ மீட்டர் நீளத்திற்கு 400 கிலோ வோல்ட் மின் தொடர்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதே போன்று, 1,230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை, உடுமலைப்பேட்டை மற்றும் தேனி பகுதிகளில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தைக் கொண்டு செல்லும் வகையில் தேனி மாவட்டத்தில் தப்பகுண்டு, மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைக்கடவு மற்றும் ராசிபாளையம் ஆகிய இடங்களில் புதிய 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளும், அவற்றை இணைத்து 788 சுற்று கிலோ மீட்டர் நீளமுடைய 400 கிலோ வோல்ட் மின்தொடர் பாதை அமைக்கும் பணிகளும் தொடங்கப்படும். திருநெல்வேலி மாவட்டம், கானார்பட்டியில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மற்றுமொரு 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
மாநிலம் முழுவதும் புதிய திட்டங்கள்:
இது மட்டுமன்றி, காஞ்சிபுரம் மாவட்டம் ஓமேகா தொழிற்பூங்கா, திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு ஆகிய இரண்டு இடங்களில் புதிய 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும்; சென்னை கோடம்பாக்கம் மற்றும் திருமங்கலம் தெற்கு; திண்டுக்கல் மாவட்டம் ஏழுவானம்பட்டி மற்றும் பாப்பம்பட்டி; கோயம்புத்தூர் மாவட்டம் குரு நல்லிபாளையம்; புதுக்கோட்டை மாவட்டம் மழையூர்; திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், நாங்குநேரி, மேலக்கல்லூர் மற்றும் பழையபேட்டை; வேலூர் மாவட்டம் முகுந்த ராயபுரம்; காஞ்சிபுரம் மாவட்டம் ஓமேகா தொழிற் பூங்கா, பெரும்பாக்கம் மற்றும் புதுத் தாங்கல்; கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி; தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம்; ஈரோடு மாவட்டம் தாளவாடி; திருவண்ணாமலை மாவட்டம் விண்ணவனூர் மற்றும் வேலூர் ஆகிய 19 இடங்களில் 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும்;
ஈரோடு மாவட்டம் சிமிட்டஹள்ளி; கரூர் மாவட்டம் இ.கருங்கல்பட்டி மற்றும் செல்லிவலசு; தஞ்சாவூர் மாவட்டம் குருவிக்கரம்பை; காஞ்சிபுரம் மாவட்டம் இளையனூர் வேலூர், மேலபுடி மற்றும் இராமாபுரம்; திருநெல்வேலி மாவட்டம் நக்கல முத்தான்பட்டி; பெரம்பலூர் மாவட்டம் பென்னகோணம்; திருச்சி மாவட்டம் டி. ஆலை; தருமபுரி மாவட்டம் வி. முத்தாம்பட்டி ஆகிய இடங்களில் 11 புதிய 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும் அமைப்பதற்கான பணிகள் இந்த ஆண்டு துவங்கப்படும்.
மொத்தத்தில், இந்த ஆண்டு 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட 10 துணை மின் நிலையங்கள், 230 கிலோவோல்ட் திறன் கொண்ட 16 துணை மின் நிலையங்கள், 110 கிலோவோல்ட் திறன் கொண்ட 19 துணை மின் நிலையங்கள் மற்றும் 33 கிலோவோல்ட் திறன் கொண்ட 11 துணைமின் நிலையங்கள் என மொத்தம் 56 துணை மின் நிலையங்கள் 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
நீண்ட கால அடிப்படையிலான ஒப்பந்தப் புள்ளிகள்:
புதிய மின் உற்பத்தி நிலையங்களை இயக்கி வைத்தல், புதிய மின் திட்டங்களைத் தொடங்குதல் மட்டுமல்லாது, பற்றாக்குறையை 85 சதவீதம் வரை ஈடு செய்யும் வகையில், நீண்ட கால அடிப்படையிலான ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் மின் கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வகையில் முதல் கட்டமாக வருகின்ற அக்டோபர் மாதம் முதல் நீண்ட கால அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு 1000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். புதுப்பிக்கத்தக்க (renewable) எரிசக்தித் துறையைப் பொறுத்த வரையில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் 7,140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே 100 சதவீதம் மின் வசதி, பெற்றுள்ள ஒரு சில மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது சுமார் 2 கோடியே 40 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. தாமதமின்றி உடனுக்குடன் மின் இணைப்பு வழங்கும் விதமாக இந்த ஆண்டு வீட்டு மின் இணைப்பு, விவசாய மின் இணைப்பு, வணிக மின் இணைப்பு, தொழிற்சாலை மின் இணைப்பு போன்ற 11 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
மேற்காணும் நடவடிக்கைகள் மூலம், தமிழகம் விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்பதோடு, மின் நுகர்வோருக்கு தடையற்ற சீரான மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications