கொல்கத்தா மோசடி நிதி நிறுவனத்தில் நளினி சிதம்பரத்தின் தொடர்பு என்ன?: திரிணாமூல் காங்கிரஸ் கேள்வி

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மோசடி செய்த சாரதா நிதி நிறுவன தலைவர் சுதிப்தா சென் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் இந்த விவகாரம் குறித்து சிபிஐக்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறுயிருப்பதாவது, பணம் சம்பாதிக்க என்னை 22 பேர் மிரட்டினர் என்று தெரிவித்துள்ளார். அதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர், தேசிய அளவில் உள்ள அரசியல்வாதிகள் அடக்கம். சென் தனது கடிதத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் மனைவி நளினி சிதம்பரத்தின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் இணையதளத்தில் கூறியிருப்பதாவது,
சாரதா நிதி நிறுவன மோசடி சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பான ஒப்பந்தத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரின் பங்கு என்ன?, இதனை காங்கிரஸ் மத்திய அமைச்சர் விளக்க வேண்டும். ஒரு அதிகாரமிக்க அமைச்சரின் வழக்கறிஞர் மனைவி ஒரு ஒப்பந்தத்தை செய்து கொடுக்க ரூ. 1 கோடி வாங்கியுள்ளார். இதுவே பிற வழக்கறிஞர்களாக இருந்தால் குறைந்த கட்டணத்தில் செய்து கொடுத்திருப்பார்கள். அவருக்கு எதற்காக இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்பட்டது? என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை நளினி சிதம்பரம் தரப்பு மறுத்துள்ளது. அவர் தரப்பில் கூறுகையில், முன்னாள் மத்திய அமைச்சர் மதாங் சிங்கின் முன்னாள் மனைவி மனோரஞ்சனா சிங் தொலைக்காட்சி சேனல் துவங்க திட்டமிட்டார். அதில் சாரதா குழுமம் ரூ. 42 கோடி முதலீடு செய்வதாக இருந்தது. இதையடுத்து சாரதா குழுமம் குறித்து விசாரித்து கூறுமாறு மனோரஞ்சனா வழக்கறிஞர்கள் மற்றும் ஆடிட்டர்கள் குழுவிடம் கேட்டுக் கொண்டார். அந்த குழுவில் நளினி சிதம்பரம் இடம் பெற்றிருந்தார். சாரதா குழுமத்தின் முதலீட்டை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று அக்குழு பரிந்துரை செய்ததின் பேரில் ஒப்பந்தம் கைவிடப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications