1870ல் விக்டோரியா மகாராணி பயன்படுத்திய காலுறைகள் ஏலம்

Subscribe to Oneindia Tamil

Queen Victoria's stockings for sale in Leyburn auction
லண்டன்: பிரபலங்களின் முடிக்கு கூட ரசிகர்களிடம் மதிப்பு இருக்கும். அதிலும் அரச குடும்பத்தினரின் உடைகள் என்றால் கேட்கவா வேண்டும். அந்த வரிசையில் தற்போது, விக்டோரியா மகாராணி பயன்படுத்திய ஒரு ஜோடிக் காலுறைகள் ஏலத்திற்கு வந்துள்ளன.

இந்த ஜோடிக் காலுறைகள் 1870ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணி பயன்படுத்தியது. வடக்கு யார்க்க்ஷயரில் உள்ள லேபர்ன் பகுதியில் இருக்கும் டெனன்ட்ஸ் ஏல நிறுவனத்தால், நாளை ஏலம் விடப்படுகிறது. பட்டுத்துணியினால் ஆன இந்தக் காலுறைகளில் விஆர் என்ற அரச முத்திரை, நூல் வேலைப்பாடுடன் பதிவு செய்யப்பட்டிருக்குமாம்.

பணியாளர்களுக்கு பரிசு...

ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சில முறைகளே உபயோகிக்கும் இது போன்ற ஆடைகளை, தன்னிடம் பணி புரிபவர்களுக்கும், தனக்குப் பிரியமானவர்களுக்கும் பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஏலத்திற்கு வரும் அன்பளிப்புகள் ...

இதுபோல் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட பொருட்களே, சில சமயங்களில் ஏலத்திற்கு வருகின்றன. இந்தக் காலுறைகளும் அந்த வகையில் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அதிகபட்ச ஏலம்...

இந்தக் காலுறைகள் 400 முதல் 600 பவுண்டுகள் வரை போகும் என்றும் ஏல நிறுவனத்தினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பழையது தான்...

இந்தக் காலுறைகள் புதிய பொலிவுடன் காணப்படவில்லை, நிறம் மங்கி அணிந்தால் கிழிந்துவிடும் என்ற நிலையிலேயே உள்ளது. இருந்த போதும், இதனுடைய வரலாற்று முக்கியத்துவத்தால் இந்த விலை கிடைக்கும் என்றும் ஏலம்விடுவோர் தெரிவித்தனர்.

மவுசு அதிகம் தான்....

முன்பொரு முறை ஏலத்திற்கு வந்த ராணியாரின் பெரிய கால்சராய், 10,000 பவுண்டு விலைபோனதை அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். மேலும், ராணியின் அனைத்து உடைகளிலும் அரச முத்திரையான விஆர் என்ற குறியீடும் இருக்கும் என்றும் ஏல நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+