டெல்லியைத் தொடர்ந்து மும்பையில் அக்கிரமம்... விருந்தில் சீரழிக்கப்பட்ட 13 வயது சிறுமி!!

மும்பை புறநகர் பகுதியான சாந்தா குரூசைச் சேர்ந்தவர் மெல்வின் டிசோசா. இவர் மும்பையில் தனது காதலி வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். அந்த விருந்துக்கு தமது நண்பர்களான சச்சின் யாதவ், பிபின்சிங், வெங்கட் நாயுடு ஆகியோரை அவர் அழைத்து இருந்தார். அத்துடன் காதலியின் தோழியான 13 வயது சிறுமியையும் டிசோசா விருந்துக்கு வரவழைத்தார்.
விருந்து நிகழ்ச்சியின் போது அனைவரும் குளிர்பானம் அருந்தினர். ஆனால் 13 வயது சிறுமி மட்டும் குளிர்பானம் அருந்திய சிறிது நேரத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி வீடு திரும்பினாள். வீட்டில் கடுமையான வலியால் துடித்த அவளிடம் தாயார் விசாரித்த போது குளிர்பானம் குடித்து மயங்கிக் கிடந்த கதையை விவரித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்..
மருத்துவர்களின் அறிக்கை மற்றும் சிறுமியின் வாக்குமூலத்தின் படி விருந்துக்கு வரவழைத்த டிசோசா மற்றும் அவரது நண்பர்கள் மூவர் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பலாத்காரம் மற்றும் சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சிறுமியின் தோழியான டிசோசாவின் காதலியும் தற்போது போலீஸ் பிடியில் சிக்கியிருக்கிறார்.
டெல்லியைத் தொடர்ந்து மும்பையில் நடந்துள்ள பலாத்கார சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications