போர்க் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டால் இலங்கையில் போர் மூளும்: அமெரிக்கா
கொழும்பு: இலங்கை இறுதிப் போரில் இலங்கை ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டால் இலங்கையில் தமிழர்கள் மீண்டும் போரில் ஈடுபடுவர் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் மிச்சேல் சிஷன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விடுதலைப்புலிகளை சர்வதேச ரீதியாக தடைசெய்யும் நடவடிக்கையில் அமெரிக்காதான் அதிகமாக ஈடுபட்டது. இதனால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ரீதியிலான உதவிகள் தடைபட்டு அதை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது.
ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் கண்காணிக்கு. இலங்கையில் சில ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுச் சென்று விட்டனர். அதேபோல் சில ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் இன்னும் தீர்வுகள் காணப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு லசந்த விக்ரமதுங்க கொலை 2010 ஹெக்நேலியகொட காணாமல் போனது, 2011 ஆம் ஆண்டு உதயன் பத்திரிகை ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதல் சம்பவம் போன்றவை உதாரணங்களாகும்.
இதேபோல் இலங்கை இறுதிப் போரில் போர்க் குற்றத்தில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டால் இலங்கை இன்னொரு போரை தமிழ் மக்களால் எதிர்நோக்க நேரிடும் என்றார் அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications