மரக்காணத்தில் அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைக்க கருணாநிதி வேண்டுகோள்

சென்னையில் செய்தியாளர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி விவரம்:
கேள்வி: மரக்காணத்தில் பெரிய கலவரம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கிறது?
பதில்:அதைப்பற்றித் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், ரவிக்குமாரும் இந்நேரம் வரை என்னைச் சந்தித்துப் பேசினார்கள். தமிழ்நாட்டில் சாதி மோதல்கள் நடப்பதும், அதன் காரணமாக துப்பாக்கி முனையிலே பதில் சொல்வதும் தமிழ்நாட்டிற்கு நல்ல அறிகுறியல்ல. உடனடியாக காவல் துறை தகுந்த கவனம் செலுத்தி, அமைதியை உருவாக்க முன் வர வேண்டும். தலைவர்களும் தங்கள் கடமையை மறவாமல் அக்கறையோடு அலசி அவர்களும் அமைதிக்கு ஒத்துழைக்க வேண்டும்.
கேள்வி: மாமல்லபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் எல்லா கட்சிகளின் தலைவர்களையும் ஒருமையில் சாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கெல்லாம் திராவிடக் கட்சிகள் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். சாதிகளையெல்லாம் அடையாளப்படுத்திப் பேசியிருக்கிறாரே அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: ராமதாஸ் பேசியதைப் பற்றி பத்திரிகையாளர்களாகிய உங்கள் உணர்வு என்ன? அதிலே உங்களுக்கு ஏற்பட்டுள்ள உணர்வு தான் எனக்கும்.
கேள்வி:நிலக்கரி சுரங்க ஊழலில் மத்திய சட்ட அமைச்சர் சி.பி.ஐ. விசாரணையிலே தலையிட்டார் என்று சி.பி.ஐ. இயக்குனரே உச்ச நீதி மன்றத்திலே அறிக்கை தாக்கல் செய்தது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: நேர்மையாக எல்லாம் நடக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து.
கேள்வி: தமிழகச் சட்டசபையில் தொடர்ந்து எதிர்க் கட்சிகளையெல்லாம் வெளியேற்றி வருகிறார்கள். அதைப் பற்றி எதிர்க் கட்சிகள் எல்லாம் கேட்டுக் கொண்டும், அரசு அதற்கு செவி சாய்க்கவில்லையே?
பதில்: உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என்று பதிலளித்திருக்கிறார் கருணாநிதி.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications