இஸ்ரேலில் குடியேறிய 'யஷுவா பென் மர்யம் அல்-மசி (எ) இயேசு கிறிஸ்து'
மாஸ்கோ: இஸ்ரேலில் குடியேற வசதியாக "இயேசு கிறிஸ்து" என்று ரஷ்ய நாட்டவர் ஒருவர் பெயரை மாற்றிக் கொண்ட சுவாரசியம் நடந்தேறியிருக்கிறது.
சிலர் மதம் மாறும்போது, ராசிப்படி என பெயர் மாற்றுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த மனிதர் வேறொரு ரகம்..ரஷ்யாவின் செல்யபின்ஸ்க் நகரை சேர்ந்தவர் வியாசேஸ்லவ் (49). இவர் இதுவரை தனது பெயரை 4 முறை மாற்றி பாஸ்போர்ட்டிலும் பதிவு செய்துள்ளாராம்.இம்முறை, அவர் மத நம்பிக்கையின் அடிப்படையில் தனது பெயரை யஷுவா பென் மர்யம் அல்-மசி என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
அதென்ன யஷுவா பென் மர்யம் அல்-மசி ? இது எபிரேய மொழிப் பெயர். இதற்கு தமிழில் இப்படி ஒரு மொழி பெயர்ப்பாம்.. அதாவது "மேரியின் மகனும் கிறிஸ்துவுமான இயேசு" என்பதுதான் பெயராம்!
இப்படி இயேசு கிறிஸ்து என்று பெயர் மாற்றிக் கொள்வதால், ஜெருசலேம் நகருக்கு புனிதப் பயணம் செல்லவும், இஸ்ரேல் நாட்டின் குடிமகனாகவும் வாய்ப்பு கிடைக்கலாம் என்பதுதான் அந்த ரஷ்ய நாட்டவரின் நோக்கமாம்!
இப்படியும் சில 'நோக்கர்கள்'!












Click it and Unblock the Notifications