கர்நாடகத்தில் பிரசாரத்திற்கு வந்த மாயாவதியின் பையை 2 முறை சோதனையிட்ட தேர்தல் ஆணையம்

அவரது கை பையில் இருந்த பர்சில் ரூ. 1 லட்சம் இருந்தது. இந்தப் பணத்துக்கு கணக்குக் கேட்டு அதிகாரிகள் கேள்வி கேட்டதையடுத்து பரபரப்பு மேலும் அதிகமானது.
கர்நாடகத்தில் வரும் மே 5ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 180 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மாயாவதி நேற்று குல்பர்கா மாவட்டம் வந்தார். அங்குள்ள ஜேவர்கி நகரில் அமைக்கப்பட்ட ஹெலிபேட்டில் மாயாவதி பயணம் செய்த ஹெலிகாப்டர் தரை இறங்கியது.
ஹெலிகாப்டரை விட்டு மாயாவதி இறங்கியதும் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட பறக்கும் படையினர் ஹெலிகாப்டரை தீவிரமாக சோதனையிட்டனர்.
பின்னர், மாயாவதியின் கையில் இருந்த கைப் பையை சோதனையிட்ட போது, உள்ளே ரூ.1 லட்சம் இருந்தது. இந்தப் பணம் ஏது,'இவ்வளவு பணத்தை கொண்டு செல்லக் கூடாது என்று அவர்கள் கூறவே, இது என்னுடன் வந்துள்ள கட்சிக்காரர்களுக்கு சொந்தமான பணம். ஒரு நபர் ரூ.50,000 வரை பணம் வைத்திருக்க அனுமதி உள்ளது என்று மாயாவதி விளக்கியதையடுத்து அந்த அதிகாரிகள் அவரை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தது.
இதனையடுத்து, பிரசார மேடை அருகே மாயாவதி காரை விட்டு இறங்கியதும், அவரது காரையும் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். இதனால், மாயாவதி கடும் எரிச்சலடைந்தார்.
பின்னர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மாயாவதி, என்னிடம் இன்று சோதனை நடத்தியது போல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கர்நாடகத்தில் பிரசாரத்திற்காக வந்தபோது பறக்கும் படையினர் ஏன் சோதனை நடத்தவில்லை?. நான் தலித் பெண் என்பதற்காக என்னிடம் மட்டும் சோதனை நடத்துகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications