மாமிசத்தையும், மதுவையும் புறக்கணித்தால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும்: சுவாமி அக்னிவேஷ்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
போலீசாரை வைத்து மட்டும் கற்பழிப்பு போன்ற குற்றத்தை நிறுத்திவிட முடியாது. மக்கள் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் கற்பழிப்பு குற்றங்கள் பெருமளவு குறையும் என்று நான் நினைக்கிறேன். இது குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மது அருந்துவதை தவிர்த்தால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும்.
மது அருந்துவதால் தான் பல்வேறு குற்றங்கள் மற்றும் விபத்துகள் நடக்கின்றன. ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உலகின் வயதான மனிதர் குறித்து ஆய்வு செய்ததில் அவர் ஒரு சைவப் பிரியர் என்பது தெரிய வந்துள்ளது.
அனைத்து நோய்கள் ஏற்பட மாமிசம் தான் காரணம் என்று பல்வேறு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை கற்பழித்தவர்களும் சரி, 5 வயது சிறுமியை கற்பழித்தவர்களும் சரி குடிபோதையில் இருந்துள்ளனர். இதன் மூலம் மது தான் அவர்களை குற்றம் செய்ய தூண்டியுள்ளது என்பது தெரிய வருகிறது. வருவாய் வருவதால் அரசு மது உற்பத்தியை நிறுத்தவில்லை. அனைத்து மாநிலங்களும் போட்டி போட்டு மது உற்பத்தி செய்கின்றன.
தினமும் ஒரு பில்லியன் மிருகங்கள் மாமிசத்திற்காக கொல்லப்படுகின்றன. இதன் பின்விளைவு பயங்கரமாக இருக்கும். பள்ளிகளில் மதுவால் ஏற்படும் சீர்கேடுகள் குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது இல்லை. ஒரு குற்றத்திற்காக தனி நபரை குறை கூற முடியாது. ஒட்டுமொத்த சமுதாயமும் தான் பொறுப்பு.
கற்பழிப்புக்கு மரண தண்டனை என்பதை நான் ஆதரிக்க மாட்டேன். மரண தண்டனையால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் உள்பட யாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது. கசாபை தூக்கில் போட்டிருக்கக் கூடாது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications