லீவில் துபாயில் இருந்து வந்த ஈமான் அமைப்பின் வி.களத்தூர் ஷாகுல் ஹமீது சாலை விபத்தில் மரணம்

கடந்த 2011ம் ஆண்டு காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தலைமையில் திருமணம் செய்து கொண்டவர் வி.களத்தூர் ஷாகுல் ஹமீது. இவருக்கு மனைவி, ஒரு குழந்தை, தாய், சகோதரி ஆகியோர் இருக்கின்றனர்.
ஈமான் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவையின் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். தேரா பகுதியில் எந்தப் பணியானாலும் அதனை நிறைவேற்றுவதில் முன்னிலை வகித்தவர். இவரது இழப்பு ஈமான் அமைப்புக்கும், அமீரக காயிதே மில்லத் பேரவைக்கும் பேரிழப்பு என ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி, அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., இனிய திசைகள் ஆசிரியர் முனைவர் பேராசிரியர் சேமுமு முஹம்மதலி ஆகியோரும் சாகுல் ஹமீது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் விபத்து:
விடுமுறைக்காக தாயகம் சென்றிருந்த ஷாகுல் ஹமீது நேற்று முன்தினம் நள்ளிரவு குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார். திண்டுக்கல்லில் சாலையோர கடையில் டீ குடிப்பதற்காக இறங்கியவர். பின்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த மற்றொரு லாரி மோதியதில் ஷாகுல் ஹமீது மீது அது மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தமிழகத்தில் மதுவினால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள், இழப்புகள் ஆட்சியாளர்களுக்கு தெரியாததல்ல. அரசு வருமானத்திற்காக தொடர்ந்து மதுக்கடைகளை அனுமதிப்பதன் மூலம் இதுபோன்ற இழப்புகள் தவிர்க்க இயலாதது ஆகிவிடும்.
இத்தகைய இழப்புகளுக்கு ஆட்சியாளர்கள் எந்த வகையில் ஈடுசெய்ய முடியும் என்பதனை அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது. எனவே எத்தகைய மாற்றுச் சிந்தனைக்கும் இடம் கொடுக்காது மதுக்கடைகளை மூடுவதன் மூலமே இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோருக்கு அரபு நாடுகளில் இருப்பது போன்று கடுமையான தண்டனை வழங்கும் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். மேலும் பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு அதிகமான இழப்பீட்டுத் தொகையினை குற்றவாளிகளிடம் அபராதமாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள்.
தொடர்பு எண்கள்:
மாமனார் நூருல்லாஹ் ஹஜ்ரத் தொடர்பு எண்: 73 73 20 71 27
ஈமான் ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர்: முதுவை ஹிதாயத் - 00971 56 684 71 20
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications