ஃபேஸ்புக்கில் தானா வந்து மாட்டிக் கொண்டு வாங்கிக் கட்டும் தமிழக காங்கிரஸ்
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி என்றைக்கு ஃபேஸ்புக்கில் அடி எடுத்து வைத்ததோ அன்றே நாம்சொல்லி இருந்தோம்,... உங்களுக்கான அருமையான செலவில்லாத ஓய்வு போக்கும் இடம் என்று.. இப்போது 100% உண்மை என நிரூபித்துக் கொண்டிருக்கிறது அந்த ஃபேஸ்புக் பக்கம்..
இன்று மாலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் போடப்பட்ட தலைப்பு இதுதான் பாஸ்.. "தமிழக தேசிய நெடுஞ்சாலைகள் அன்றும் இன்றும் !"
இதுதான் அந்த பக்கத்தின் முகப்பு படம்

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் தங்கநாற்கர திட்டத்தின் கீழ் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அல்லவா சீரமைக்கப்பட்டது.. இதை ஏன் காங்கிரஸ் கட்சி தமது ஃபேஸ்புக்கில் போட்டது? என்று குழம்பிப் போன "காங்கிரஸ் பக்க" விரும்பிகள் தங்களது "எண்ணப் பகிர்வுகளை" கொட்டிக் "குதறியிருக்கின்றனர்".
ஆமாங்க பாஸ்.. கொஞ்சம் எட்டிப் பாருங்க... தானா வந்து மாட்டிக் கொண்ட தமிழக காங்கிரஸ் பக்கத்தை...












Click it and Unblock the Notifications