இன்று ஹோட்டல்கள் ஸ்டிரைக்… 'அம்மா உணவகத்தில்' கூட்டம் அலைமோதல்!!

ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவு தரமானதுதான என்பதற்காக உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மேலும் குளிர்சாதன வசதிக் கொண்ட ஓட்டல்களுக்கு 12.36 சதவீதம் சேவை வரி அண்மையில் மத்திய அரசு விதித்தது. இதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், சேவை வரி மற்றும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் ஆகியவற்றை ரத்து செய்யக் கோரியும் நாடு முழுவதும் இன்று ஓட்டல்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 75 சதவீத உணவகங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
10 ஆயிரம் உணவகங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. சைவம், அசைவ உணவகங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் சிறு உணவகங்கள் இந்த ஸ்ட்ரைக்கில் பங்கேற்க வில்லை.
சென்னையில் முக்கிய உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் அம்மா உணவகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பிற ஹோட்டல்களை விட இங்கு 1ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யப்படுவதால் சாதாரண நாட்களில் ஏராளமானவர்கள் வந்து இட்லி சாப்பிடுவார்கள். இன்று மிகப்பெரிய உணவகங்கள் மூடப்படும் என்று கூறப்பட்டதால் அதிக கூட்டத்தை எதிர்ப்பார்த்து கூடுதல் இட்லி தயாரிக்கப்பட்டதாக மகளிர் சுய உதவிக்குழுவினர் தெரிவித்தனர்.
வழக்கத்திற்கு மாறாக இன்று விரைவிலேயே இட்லிகள் விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் அவர்கள் கூறினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications