கடத்தப்பட்ட திமுக பிரமுகர்! முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது வழக்குப் பதிவு!
விருதுநகர்: திமுக பிரமுகர் கோஷ் பெங்களூருக்கு கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோஷ் யார்?
விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியை சேர்ந்த கோஷ், கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட சீட் வாங்கித்தர கேட்டு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரனிடம் ரூ.32 லட்சம் கொடுத்தாக கூறி வருகிறார். மேலும் தமக்கு சீட் வாங்கித் தராததுடன் கொடுத்த பணத்தையும் சாத்தூர் ராமச்சந்திரன் திருப்பித்தரவில்லை என அவர் போலீசரில் புகார் செய்திருந்தார். இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
திடீர் மாயம்
இந்நிலையில் கோஷ் திடீரென மாயமானர். இதனால் அவரை கண்டுபிடித்து தரக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோஷின் அண்ணன் மனைவி குருவம்மா மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் காயங்களுடன் கோஷ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் கோஷ் மாயமான வழக்கின் விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டது.
புதிய புகார்
இதனிடையே மதுரையில் சிகிச்சை பெற்று வரும் கோஷ் ஸ்ரீவில்லிப்புத்தூர் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், கடந்த 14-ந்தேதி தி.மு.க. பிரமுகர்களான உதயசெழியன், மல்லி ஆறுமுகம் ஆகியோர் என்னை காரில் பெங்களூர் கடத்தி சென்றனர். அங்கு வைத்து வழக்கை சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுமாறு அடித்து சித்ரவதை செய்தனர். பின்னர் என்னை அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டனர். முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தூண்டுதலின்பெயரிலேயே அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர் என்று கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் சாத்தூர் ராமச்சந்திரன் உள்பட 3 பேர் மீது கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்












Click it and Unblock the Notifications