மீண்டும் 54 ரூபாய் விலை குறைந்தது மானியம் வழங்கப்படாத சமையல் கியாஸ் விலை

பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியான அடுத்த 3 மணி நேரத்தில் மானியம் அல்லாத சமையல் கியாசுக்கான விலையும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சிலிண்டர் ஒன்றுக்கு 54 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது.
மானிய சுமையை குறைப்பதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு கட்டுப்பாடு கொண்டு வந்தது. முதலில் ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு மானிய விலையில் 6 சிலிண்டர்களே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்பட்டதையடுத்து ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் எண்ணிக்கையை மத்திய அரசு 9 ஆக உயர்த்தியது. 9 சிலிண்டருக்கு மேல் தேவைப்பட்டால் மானியம் இல்லாத விலை கொடுத்து சமையல் கியாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி மானிய விலையிலான சிலிண்டர் ரூ.410 ஆகவும், மானியம் அல்லாத சிலிண்டர் ரூ.942 ஆகவும் கொடுக்கப்பட்டு வந்தது.
கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சி காரணமாக மானியம் அல்லாத சமையல் கியாஸ் சிலிண்டருக்கான விலையும் குறைக்கபட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி ரூ.38 குறைக்கப்பட்டது. ஏப்ரல் 1-ந்தேதி 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த மாதம் 54 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மானியம் அல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் மீதான விலை இந்த மாதம் தான் அதிக அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு மற்ற அத்தியாவசியப் பொருட்களைவிட சமையல் கியாசுக்குத்தான் அதிக அளவில் மானியம் வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications