கர்நாடக தேர்தலுக்கு முன் காவிரி மேலாண்மை அமைக்க தேர்தல் ஆணையம் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil

கர்நாடக மாநிலத்தில் இந்தமாதம் 5ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தேர்தல் விதிமுறை மீறியதாக கருதப்படுமா என்பது குறித்து மத்திய நீர் வளத் துறை தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையை கேட்டிருந்தது.
இதற்கு பதில் அனுப்பியுள்ள தேர்தல் ஆணையம், கர்நாடகாவில் தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது. காவிரி நதி நீர் ஒழுங்கு முறை குழுவையும் மே 5ம் தேதி வரை அமைக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்துவிதமான ஆலோசனைகளையும் நடத்திய பிறகு தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications