கர்நாடகாவில் நாளை ஓய்கிறது தேர்தல் பிரசாரம்! இறுதிக் கட்ட வாக்கு வேட்டை மும்முரம்!!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு 5-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் இறுதி கட்ட வாக்கு வேட்டையில் கட்சிகளின் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் மைசூர்மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் ஒருவர் காலமானதால் அங்கு 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறவில்லை. இதர 223 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் மொத்தம் 2,947 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். பாஜக சார்பில் 222 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 222 தொகுதிகளிலும், எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 216 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இது தவிர 1223 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

Kumaraswamy
மாநிலத்தில் 4 முனை போட்டி நிலவுவதால் பிரசாரம் களை கட்டி காணப்பட்டது. காங்கிரஸ், பாஜகவின் தேசிய தலைவர்கள் பலரும் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மங்களூரில் நாளை இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார். வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. பதற்றமான தொகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+