சரப்ஜித் சிங் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல்
டெல்லி: பாகிஸ்தானில் கைதிகள் தாக்குதலில் கோமா நிலைக்குச் சென்று மரணமடைந்த சரப்ஜித் சிங் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் சிறையில் தாக்கப்பட்டு 6 நாட்களாக உயிருக்கு போராடிய சரப்ஜித்சிங்கினை நேற்று முன்தினம் அவரது மனைவி சுக்பிரீத் கவுர், சகோதரி தல்பீர்சிங், மகள்கள் பூனம், ஸ்வப்னதீப் கவுர் ஆகியோர் பார்த்து விட்டு நேற்று டெல்லி திரும்பினார்கள். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.45 மணிக்கு மரணம் அடைந்தார். இதனால் சரப்ஜித் சிங்கின் உறவினர்கள் துயரமடைந்துள்ளனர்.
சரப்ஜித் சிங் மரணம் செய்தி அறிந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் சரப்ஜித் சிங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கு அவர் 40 நிமிடங்கள் இருந்தார்.
இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தி உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்டதாக உடனிருந்தவர்கள் கூறினார்கள். சரப்ஜித் சிங் உடலை உடனடியாக கொண்டு வர ஏற்பாடு செய்வதாக அப்போது ராகுல் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து பிஎஸ்எப் விமானத்தின் மூலம் சரப்ஜித் சிங் குடும்பத்தினர் தங்களின் சொந்த ஊரான அமிர்தசரஸ்க்கு புறப்பட்டு சென்றனர்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications