பாரத் பெட்ரோலியத்தில் வேலை வாங்கி தருவதாக 12 பேரை ஏமாற்றிய வழக்கு: மேலும் ஒருவர் கைது
சென்னை: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 12 பேரை மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தியாகராயநகர் தெற்கு போக் ரோட்டில் வசிப்பவர் பாண்டித்துரை (வயது 52). இவரது வீட்டின் அருகே பரமசிவம் மளிகை கடை நடத்தி வருகிறார். பரமசிவத்திடம் தனக்கு பெரிய அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அதன் மூலம் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வாங்கி தர முடியும் என்றும் பாண்டித்துரை கூறியுள்ளார்.
இதை உண்மையென நம்பிய பரமசிவம், தனக்கு தெரிந்த 12 நபர்களை பாண்டியத்துரையிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர் சிந்தாதிரிப்பேட்டையில் கொரியர் மற்றும் டிராவல்ஸ் நடத்தி வரும் அருண் கிருஷ்ணா என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்து 12 பேரிடம் இருந்து ரூ.44 லட்சத்து 10 ஆயிரம் பெற்றனர்.
இதில் தனது பங்காக பாண்டித்துரை ரூ.15 லட்சம் பெற்றுள்ளார். பணம் செலுத்தியவர்களுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் என்ற லெட்டர் பேர்டு தயாரித்து, அதில் வேலைக்கான உத்தரவை பொது மேலாளர் கையெழுத்து இட்டதுபோல தயாரித்து வழங்கி உள்ளனர்.
வேலை நியமன கடிதத்தை பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட கம்பெனியில் கடிதத்தை கொடுத்தபோது தான் அவை போலியானது என தெரியவந்தது. இதுகுறித்து பரமசிவம் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் கொடுத்ததன் பேரில் நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம் உத்தரவிட்டார்.
புகாரின் அடிப்படையில், வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த பாண்டித்துரை மற்றும் அருண் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அருண் கிருஷ்ணா ஏற்கனவே கைது செய்யப்பட்டார். தற்போது பாண்டிதுரையும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications