நிரம்பி வழியும் சென்னை- பெங்களூர் டபுள் டக்கர் ஏசி ரயில்
சென்னை: சென்னை-பெங்களூர் இடையே புதிதாக விடப்பட்டுள்ள டபுள் டக்கர் ஏ.சி. ரயில் நிரம்பி வழிகிறது. காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை.
சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு இரண்டு அடுக்கு ஏ.சி. ரயில் சமீபத்தில் விடப்பட்டது. முற்றிலும் குளு குளு வசதி கொண்ட இந்த ரயிலில் 10 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஒரு பெட்டிக்கு 120 பேர் வீதம் 1,200 பயணிகள் இந்த ரயிலில் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம். முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த சொகுசு ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரயில் சேவை துவங்கப்பட்ட முதல் நாளில் 500-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர் பகுதி மக்களுக்கு பயனுள்ள இந்த ரயில் தற்போது நிரம்பி வழிகிறது. நேற்று அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. அதே போல் இன்றும் 10 பெட்டிகளும் நிரம்பியது. இந்த ரயிலில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணம் செய்ய முடியாது. காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களும் பெட்டியில் நின்று செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை.
சேர் கார் இருக்கைகள் உறுதி செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். தற்போது கோடை வெயில் வறுத்து எடுத்துவரும் நிலையில் குளு குளு பயணத்தை பொதுமக்கள் விரும்புகிறார்கள். சென்னையில் இருந்து பெங்களூருக்கு கட்டணம் ரூ.470 நிர்ணயிக்கப்பட்டாலும் அதை பெரிதாக நினைக்கவில்லை. பயணத்தின் போது சோர்வு, அசதி ஏற்படாமல் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதால் இரண்டு அடுக்கு ரயிலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணிக்கிறார்கள்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications