லோக்சபா தேர்தலுக்கான வேலைகளை தொடங்கிட்டோம்...: வைகோ

Subscribe to Oneindia Tamil

Vaiko
தூத்துக்குடி: எதிர்வரும் லோக்சபா தேர்தலுக்கான வேலைகளை மறுமலர்ச்சி திமுக தொடங்கிவிட்டது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய வைகோ, காமராஜர், அண்ணா ஆட்சி காலத்தில் மது மூலம் கிடைக்கும் வருமானம் தேவையில்லை என்று மதுக்கடைகளை திறக்கவில்லை. ஆனால் இப்போது வருமானத்திற்காக மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நடைபயணம் மேற்கொண்டு வருகிறோம். இது வெற்றிகரமாக முடியும். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டால் வியாபாரிகள், பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் இருந்து அகற்ற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். அதேப்போல் கூடங்குளம் அணுமின்நிலையத்தையும் மூட வேண்டும்.

மதிமுக லோக்சபா தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டது. அதற்கான நிதியளிப்புக் கூட்டங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. ராஜிவ் வழக்கில் மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்து தண்டனைக் குறைப்புக்கு தமிழக முதல்வர் வழி செய்ய வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+