இலங்கையில் 'பெளத்த தலிபான்' அமைப்பாக உருவெடுக்கும் பொதுபல சேனா: கிறித்துவ மதகுரு புகார்
கொழும்பு: இலங்கையில் அண்மைக்காலமாக தீவிரமாக செயல்பட்டு வரும் பொதுபல சேனா என்ற பவுத்தர்களின் அமைப்பு ஒரு 'பெளத்த தலிபான்' அமைப்பாக உருவெடுத்திருப்பதாக அந்நாட்டின் கத்தோலிக்க மதகுருக்களில் ஒருவரான ரெய்மன்ட் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
தி ஃபைட் என்ற கிறித்துவ பாதுகாப்பு அமைப்புக்கு காலி மாவட்ட ஆயரான ரெய்மன்ட் விக்கிரமசிங்க எழுதியுள்ள கடிதம் ஒன்றில், பொதுபல சேனா என்ற அமைப்பு தொடர்ச்சியாக சிறுபான்மை இனங்களுக்கு எதிரான வன்முறைகளை மேற்கொண்டு வருகிறது.
போர் முடிவடைந்த சில ஆண்டுகளிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதால் இலங்கை வாழ் சமூகங்களுக்கு இடையில் வன்முறையை மீண்டும் தோற்றுவிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் நிலையான சமாதானம் மற்றும் அமைதி பேணப்படுவதற்காக சிறப்பு குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications