மதுரையில் போலி தங்க நாணயம் தந்து மோசடி செய்த பெண் ஓராண்டுக்குப் பின் குழந்தையுடன் கைது!
மதுரை: மதுரையில் போலி தங்க நாணயம் கொடுத்து ஏமாற்றிய பெண் ஓராண்டுக்குப் பின் கைக் குழந்தையுடன் கைது செய்யப்பட்டார். இன்னொரு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை சிந்தாமணியை சேர்ந்த மல்லிகா (40) என்ற பெண்ணை ஏமாற்றி 15 போலி தங்கக் நாணயங்களைத் தந்துவிட்டு ரூ. 30,000 வாங்கிச் சென்றனர் இரு பெண்கள். இதையடுத்து அந்தப் பெண்கள் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் மல்லிகா மறைத்து விட்டார்.
இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் மல்லிகா தவிட்டுசந்தை பஸ் நிறுத்தத்தில் வந்திறங்கினார். அப்போது முன்பு போலி தங்க காசு கொடுத்தவர்களில் ஒரு பெண், கைக்குழந்தையுடன் நிற்பதை பார்த்தார். உடனே அந்த பெண்ணை பிடித்து விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது, அவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த மீனாட்சி (23) என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது, தனது உறவுக்காரப் பெண்ணான வள்ளியும் (21) தானும் தங்க நாணயங்களைக் கொடுத்து பணம் வாங்கியதாக ஒப்புக் கொண்டார். ஆனால், அவை போலி என்று எனக்கு தெரியாது என்றும், வள்ளி தான் அதைக் கொடுத்தார் என்றும் கூறினார்.
தனது கணவர் கட்டிட வேலைக்காக மதுரை வந்துள்ளதால் அவரைப் பார்க்கவே கைக்குழந்தையுடன் வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். வள்ளியை போலீசார் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications