சத்துணவு.. பருப்பு பயன்படுத்தும் நாட்களில் காய்கறிக்கு 70 காசு, பயன்படுத்தாத நாட்களில் 82 காசு
நெல்லை: சத்துணவு திட்டத்திற்கு காய்கறி, எரிபொருள் வாங்க அரசு நிதியை அதிகரித்துள்ளது.
எம்ஜிஆர் சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு சத்துணவு தயாரிக்க தேவைப்படும் காய்கறி, மசாலா பொருட்கள் மற்றும் எரிபொருள்கள் வாங்க வழங்கப்பட்ட உணவூட்ட செலவினம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காய்கறிக்கு 32 காசு, தாளிதத்துக்கு 14 காசு, எரிபொருளுக்கு 24 காசு என 70 காசு அதிகரித்துள்ளது.
பருப்பு பயன்படுத்தும் நாட்களில் காய்கறி 70 காசு, தாளிதம் 20 காசு, எரிபொருள் 40 காசு என 1 ரூபாய் 30 காசும்,
பருப்பு பயன்படுத்தாத நாட்களில் காய்கறி 82 காசு, தாளிதம் 40 காசு, எரிபொருள் 48 காசு என ஒரு ரூபாய் 70 காசும் வழங்க உத்தரவாகியுள்ளது.
நடுநிலைப்பள்ளி மாணவர்கள்
நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 80 காசுலிருந்து பருப்பு பயன்படுத்தும் நாட்களில் 1 ரூபாய் 40 காசும், பருப்பு பயன்படுத்தாத நாட்களில் 1 ரூபாய் 80 காசுமாக உணவூட்டும் மொத்த செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடிப் பிள்ளைகள்
இதே போல் 5 வயது குழந்தைகளுக்கான உணவூட்டும் செலவு 56 காசிலிருந்து 1 ரூபாய் 13 காசு முதல் 1 ரூபாய் 35 காசு வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சத்துணவு திட்டத்துக்கு தற்போது வழங்கி வரும் 5 கோடியோ 76 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயுடன் கூடுதலாக 5 கோடியோ 73 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.
அதே போல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் திட்டத்துக்கு தற்போது ஆகும் செலவான ரூ.1 கோடியோ 62 லட்சத்து 71 ஆயிரத்துடன் அதிகப்படியாக 1 கோடியோ 99 லட்சத்து 25 ஆயிரம் செலவாகும். இச்செலவுக்கு நிதி ஓப்பளிப்பு வழங்கி அரசு அணையிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications