கூடங்குளத்தில் இம்மாதம் மின் உற்பத்தி... இன்னொரு பொய் சொல்லும் நாராயாணசாமி!

மாநிலங்களவையில் பேசிய அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது: அணு மின் நிலையம் இயங்குவதற்கான அனுமதியை அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிவிட்டது.
ரஷ்யாவுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், அணு மின் நிலையத்தின் முதல் யூனிட் மே மாதத்தில் இருந்து இயங்கத் தொடங்கும் என்று ரஷ்ய துணைப் பிரதமரிடம் தெரிவித்தார்.
இரண்டாவது யூனிட்டின் பணிகள் 93 சதவிகிதம் முடிந்திருப்பதாகவும், அந்தப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரஷ்யாவிடம் சல்மான் குர்ஷித் விளக்கம் அளித்திருந்தார்.
3வது மற்றும் 4வது யூனிட்டுகளின் கட்டுமானம் குறித்தும் இருதரப்பிலும் ஆலோசிக்கப்பட்டது என்றார் நாராயணசாமி.
கூடங்குளத்தில் இதோ இந்த வாரம், இந்த மாதம், 2 வாரத்தில், 3வது வெள்ளிக்கிழமை மின் உற்பத்தி துவங்கும் என்று நாராயாணசாமி சொல்லாத வாரமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications