வரும் 9ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
நெல்லை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் நான்கு இணைய தளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காக தேசிய தகவல் மையத்தில் நிக் 16 சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வு முடிவுகளை நான்கு இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், தேசிய தகவல் மையங்களிலும் மற்றும் மாநிலத்தில்
உள்ள அனைத்து மைய கிளை நூலகங்களிலும் மாணவ, மாணவியர் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செல்போன்களின் மூலமும், கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு 8ம் தேதி வெளியிடப்படும். மேலும் மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிக்கு சென்று மதிப்பெண் பட்டியல் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வுதுறை அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள்
இவற்றில் மூன்றாவது இணையதளம், ஜிபிஆர்எஸ் உடன் கூடிய மொபைல் போனிலும், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என தேர்வு துறை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
