இன்ஜியரியங் கல்லூரி களில் நாளை முதல் விண்ணப்பம் வினியோகம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழ்நாட்டில் இஞ்சினியர் படிப்பிற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (மே 4) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பம் 59 மையங்களுக்கு அனுப்பபட்டுள்ளன.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் 9ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. குறிப்பாக அதிக மாணவர்கள் விருப்பி கற்கும் இன்ஜினியரிங் கல்விக்கான விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்படும் என அண்ணா பல்கலை கழகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் 59 மையங்களுக்கும் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பகட்டணம் ரூ.500 ஆகும். எஸ்சி, எஸ்டியினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினராக இருப்பின் அதற்கான சான்றிதழை கொண்டு வரவேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும். கட்டணத்தை டிடியாகவோ அல்லது பணமாகவோ கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

டிடிஐயை த செகரட்டரி, தமிழ்நாடு இன்ஜினியரிங் அட்மிஷன், அண்ணா யூனிவர்சிட்டி என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும்.

தற்போது ஒவ்வொரு மையத்திற்கும் 2 ஆயிரம் முதல் 8 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவை காலியான பின்னர் தேவைப்படும் மையங்களுக்கு கூடுதலாக விண்ணப்பங்கள் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளனர்.

நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை வருகிற 20 தேதி வரை தினமும் வழங்கப்படும். ஞாயிற்று கிழமைகளிலும் விண்ணப்பங்கள் தடையின்றி வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+