சிவகாசி வெடி விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

சிவகாசி நாரணாபுரம் பட்டாசு ஆலை விபத்தில், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

சிவகாசி அருகே நாரணாபுரம் ரத்னா பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த வெடி விபத்தில், மாரிமுத்து, 48, செல்லையா, 42, கனி,40, முருகன்,45, பால்ராஜ், 50, ஆகிய 5 பேர் இறந்தனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவான பட்டாசு ஆலை அதிபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பவுல் காந்தி, 38, புதன்கிழமை இறந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை மேலும் ஒருவர் பலியாதைத் தொடர்ந்து பட்டாசு விபத்தின் பலி எண்ணிக்கை, 7 ஆக உயர்ந்தது.

இதனைத் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த ஒருவர் நள்ளிரவில் உயிழந்தார் இதனையடுத்து பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+