புதிய நீதிக் கட்சி ஏ.சி. சண்முகம் தொடங்கும் ப்ளாஸ் டிவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் விரைவில் ஒரு பொழுகுபோக்கு மற்றும் செய்திச் சேனல் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், என அனைத்து கட்சியினருக்கும் ஒரு தொலைக்காட்சி சேனல் உள்ளது.

கட்சி சார்பற்று உள்ள சில தொலைக்காட்சிகளும் அந்தந்த நேரத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செய்திகளை ஒளிபரப்புகின்றன.

இந்த போட்டிகளுக்கு இடையே தற்போது புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் புதிய டிவி சேனலை தொடங்க உள்ளதாக தெரிகிறது.

இந்த தொலைக்காட்சி செய்தி மற்றும் பொழுது போக்கு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றதாம்.

இந்த தொலைக்காட்சி அலுவலகம் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளாம்.

இந்த தொலைக்காட்சிக்கு முதலில் புரட்சி தலைவர் டிவி, எம்.ஜி.ஆர். டிவி, என்று தான் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் தமிழ்நாட்டு நிலவரங்களை கருத்தில் கொண்டு பிளாஸ் டிவி என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.

தற்போது தொலைக்காட்சியின் ஆரம்ப கட்ட பணிகள் முடிவந்தடைந்து, இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றனதாம்.

விரைவில் தமிழகத்தில் அதிகார பதவியில் உள்ளவர் அல்லது இந்திய அளவில் புகழ் பெற்ற ஒருவரை கொண்டு திறப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+