தமிழக மாணவர்கள் 97 பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 97 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
2012ம் ஆண்டுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 3) வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 998 பேர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றனர்.
கேரளாவைச் சேர்ந்த ஹரிதா வி. குமார் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 97 பேர் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதிலும் தமிழ் வழியில் எழுதிய 2 பேர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழக அளவில் ஏ.அருண் தம்புராஜ் 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் தற்போது ஐ.பி.எஸ். அதிகாரியாக கர்நாடகத்தில் பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் டி. பிரபு ஷங்கர் (29) அகில இந்திய அளவில் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
நெசவாளர் குடும்பம்
ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழ் வழியில் எழுதி 91-ஆவது ரேங்க் பெற்றுள்ளார் காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்தூரைச் சேர்ந்த கங்காதரன் (30). இவர் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத முடியுமா என்ற சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. நிச்சயம் தமிழில் எழுதினால் ஐ.ஏ.எஸ்.-ஆக முடியும் என்கிறார் கங்காதரன்.
நாடுமுழுவதும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 29 பேர் இந்த ஆண்டு கூடுதலாக சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications