பன்சால் மருமகன் விவகாரம்.. இன்று மாலை காங். முக்கிய முடிவு

1975 ஆம் வருடம் ரயில்வே பணியில் சேர்ந்தவர் மகேஷ் குமார். இவர் தமது பதவி உயர்வுக்காக ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் மருமகன் விஜய் சிங்லா மற்றும் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக ரூபாய் 90 லட்சத்துடன் மும்பை சென்றிருந்த போது சிபிஐ போலீசாரிடம் சிக்கினார். அவர் கொடுத்த தகவலின்படி விஜய் சிங்லாவை சிபிஐ போலீசார் டெல்லியில் கைது செய்தனர். அவருடன் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பவன்குமார் பன்சாலின் அமைச்சர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் தமக்கும் தமது மருமகனுக்கும் எந்த ஒரு பண ரீதியான தொடர்பும் இல்லை என்றும் பன்சால் விளக்கம் அளித்தார்.இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்கை பவன்குமார் பன்சால் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது தாம் அமைச்சர் ப்தவியை ராஜினாமா செய்ய விரும்புவதாகவும் கூறினார். ஆனால் இதை பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்திருக்கிறார்.
இந்தநிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் சோனியாவீட்டில் கூடுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அப்போது பன்சால் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications