பஸ்கள் மீது கல்வீச்சு.. வீண் பழி போட சதி - பாமக புகார்

இதுதொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மரக்காணம் கலவரத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியதற்காக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு, அன்புமணி ராமதாசு உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் உடைக்கப்படுவதாகவும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு பா.ம.க.வினர் தான் காரணம் என்றும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அறவழியில் அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசு அறிவுறுத்தியுள்ளார். அதன்படியே ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள், கறுப்புக்கொடி ஏற்றுதல் உள்ளிட்ட அறவழிப் போராட்டங்களில் பா.ம.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வன்முறைகளுக்கு பா.ம.க. மீது பழி போடப்படுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எவரும் எங்கும் பேருந்துகள் மீது கல்வீச்சு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் போன்ற செயல்களில் ஈடுபடவில்லை.
பா.ம.க. ஒரு வன்முறை கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக காவல்துறையில் சிலரும் இதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது. இனியாவது காவல்துறையினர் நியாயமாக செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் தமிழகத்தில் சிறு தவறு நடந்தாலும் அதற்கு நாம் தான் காரணம் என்று பழி போட ஆட்சியாளர்களும், எதிரிகளும் திட்டமிட்டிருப்பதால், பொது மக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில், பா.ம.க.வினர் தொடர்ந்து அறவழியில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துமாறு பாட்டாளி மக்கள் கட்சித் தலைமை நிலையம் கேட்டுக்கொள்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications