ஜூலை 21ல் மும்பை, ஹைரதாபாத், பெங்களூரில் குண்டுகள் வெடிக்கும்: அல் ஜிகாத் மிரட்டல் கடிதம்

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அல் ஜிஹாத் லோகோவுள்ள கடிதம் ஒன்று வந்தது. அதில் மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் உள்ள பொது இடங்கள் மற்றும் அமெரிக்க தூதரகங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மும்பை போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கடிதத்தின்படி அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீது தான் அவர்கள் குறி வைத்துள்ளனர். மிரட்டல் விடுத்துள்ளவர்கள் அமெரிக்க அதிகாரிகள் தூதரகங்களை காலி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
வரும் ஜூலை மாதம் 21ம் தேதி ஹைதராபாத், பெங்களூர் மற்றும் மும்பையில் உள்ள பொது இடங்கள், ரயில் நிலையங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் மும்பையில் உள்ள அமெரிக்க தூரகத்தில் குண்டு வெடிக்கும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல் ஜிகாத் என்று ஒரு தீவிரவாத அமைப்பு இல்லை. அதனால் ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்பு இந்த மிரட்டலை விடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications