கட்சி பார்ட்டியில் நிர்வாணமாக நடனமாடிய காங்கிரஸ் மாணவரணி மும்பை தலைவர் சஸ்பெண்ட்

மகாரஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான கன்டிவ்லியில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் மாணவரணியான நேஷனல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் ஆஃப் இந்தியாவின் முகாம் ஒன்று நடந்தது. கடந்த 14ம் தேதி அந்த முகாமில் நடந்த விழா ஒன்றில் மாணவர் அணியின் மும்பை பிரிவு தலைவரான சூரஜ் சிங் தாகூர் நிர்வாணமாக நடனமாடிய வீடியோ யூடியூப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்பட்டது. தற்போது அந்த வீடியோ யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அவர் குடிபோதையில் நிர்வாணமாக ஆடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சூரஜ் மற்றும் அவருடன் சேர்ந்து குடித்துவிட்டு ஆடிய இரண்டு மாணவரணி நிர்வாகிகள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி முடித்த பிறகு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த சம்பவம் அதிரிச்சியை அளித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தான் சூரஜ் மாணவர் அணியின் மும்பை பிரிவு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பேரறிவாளன் எழுதிய புத்தகத்தை எதிர்த்து 2011ம் ஆண்டில் போராட்டம் நடத்தியதன் மூலம் பிரபலமானவர் சூரஜ் சிங் தாகூர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications