அமெரிக்காவில் மாணவர்களை கவர கல்விக் கட்டணத்தை 45 சதவீதம் குறைத்த கல்லூரிகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதால் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 45 சதவீதம் குறைத்துள்ளன.

வாஷிங்டன்னைச் சேர்ந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வர்த்தக அதிகாரிகளின் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவில் உள்ள 383 தனியார் கல்லூரிகளில்(4 ஆண்டு படிப்பு) கல்விக் கட்டணம் குறித்து ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவை இன்று வெளியிட்டுள்ளது.

உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதால் கடந்த 2012ம் ஆண்டில் அமெரிக்க கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை பெருமளவு குறைத்துள்ளன. அதாவது 45 சதவீதம் குறைத்துள்ளன. இவ்வாறு கல்விக் கட்டணத்தை குறைத்தாலாவது மாணவ, மாணவியர் அதிக அளவில் சேர்வார்கள் என்று கருதப்பட்டது.

கட்டணக் குறைப்பு கை கொடுக்கவில்லை

கட்டணக் குறைப்பு கை கொடுக்கவில்லை

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கல்விக் கட்டணத்தை குறைத்தும் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.

தனியார் கல்லூரியில் படிக்க ஆண்டுக்கு ரூ. 32 லட்சம் தேவை

தனியார் கல்லூரியில் படிக்க ஆண்டுக்கு ரூ. 32 லட்சம் தேவை

அமெரிக்காவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்க ஆண்டுக்கு ரூ. 3,255,787.35 தேவைப்படுகிறது. தங்கும் வசதி, புத்தகங்கள் உள்ளிட்ட செலவுகள் இதில் அடக்கம்.

தவறான நேரத்தில் கல்விக் கட்டணம் குறைப்பு

தவறான நேரத்தில் கல்விக் கட்டணம் குறைப்பு

அமெரிக்காவில் உயர் கல்வி படித்து முடித்து வெளியேறுவோரின் எண்ணிக்கை 2010ம் ஆண்டு முதல் துவங்கிய 10 ஆண்டுகளில் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை குறைத்துள்ளது பயனளிக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+