சம பலத்தில் பாஜக- மதசார்பாற்ற ஜனதா தளம்!: எதிர்க் கட்சி அந்தஸ்து யாருக்கு?

அந்தக் கட்சி மொத்தமுள்ள 223 இடங்களில் 40 இடங்களில் வென்றுள்ளது. இதன்மூலம் சட்டசபையில் எதிர்க் கட்சிப் பதவிக்கு பாஜகவுக்கு போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தேர்தலில் 80 இடங்களில் வென்ற காங்கிரசுக்கு கூடுதலாக சுமார் 41 இடங்கள் கிடைத்துள்ளன. கடந்த முறை 25 இடங்களில் மட்டுமே வென்ற மதசார்பற்ற ஜனதா தளம் தான் இந்த முறை கிட்டத்தட்ட 40 இடங்களைப் பிடித்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி தான் என்றாலும் ஜனதா தளத்தின் வெற்றியுடன் ஒப்பிடுகையில் அந்தக் கட்சி இம்முறை தேர்தலில் பெரிய லாபம் அடையவில்லை என்பதே உண்மை.
இரண்டரை ஆண்டுகள் பாஜக ஆதரவோடு முதல்வராக இருந்த கெளடாவின் மகன் குமாரசாமியின் ஆட்சி காலம் ஊழல்கள் அற்றதாகவும், விவசாயிகளுக்கு ஆதரவானதாகவும் இருந்தது. அதே போல பல நகர்ப்புற வளர்ச்சித் திட்டப் பணிகளும் அந்தக் காலத்தில் தான் துவக்கப்பட்டன.
இதனால் குமாரசாமிக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்தது. மேலும் சமீபத்தில் நடந்த பல கருத்துக் கணிப்புகளிலும் சிறந்த முதல்வர், அடுத்த முதல்வராக யார் வந்தால் நல்லது போன்ற கேள்விகளுக்கு பெரும்பாலானவர்கள் குமாரசாமிக்கே வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications