கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 103 தொகுதிகளில் காங் முன்னிலை... ஆட்சியை பிடிக்கிறது
Subscribe to Oneindia Tamil

கர்நாடக மாநிலத்தில் 223 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. 4.36கோடி வாக்காளர்களில் 70.23% பேர் வாக்களித்தனர். இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி 103 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து ஆட்சியை 7 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் கைப்பற்றுகிறது. பாஜகவை முந்தும் வகையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 47 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 44 தொகுதிகளிலும் எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளம் 10 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இருப்பதால் அக்கட்சியினர் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications