மதுரையில் தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும்: போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபர்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று மதுரை நகர காவல் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
மதுரை நகர காவல் நிலையத்திற்கு நேற்று இரவு ஒரு போன் வந்தது. எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் தன்னை யார் என்று அறிமுகம் செய்து கொள்ளாமல் மதுரையில் தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும் என்று மட்டும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதே போன்று கடந்த 2 வாரங்களுக்கு முன்பும் போனில் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து மதுரை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டலால் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications