விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகம் தீவைத்து எரிப்பு: மறைமலைநகரில் பதட்டம்
சென்னை: மறைமலைநகரில் விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகம் தீவைத்து எரிக்கப் பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மறைமலைநகர் அடிகளார் சாலையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு வந்த மர்ம கும்பல் ஒன்று, கீற்று கொட்டகையிலான கட்சி அலுவல கத்திற்கு தீ வைத்து தப்பி ஓடி விட்டனர். காற்றின் வேகத்தால், தீ மளமளவென கொட்டகை முழுவதும் பரவி பற்றி எரிந்தது.
தகவல் அறிந்ததும் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். ஆனாலும், அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி, பேனர்கள் எரிந்து நாசமானது.
கட்சி அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்ட செய்தி அறிந்து ஏராளமான விடுதலை சிறுத்தை பிரமுகர்கள் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், டி.எஸ்.பி. குமார், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் சமாதானம் ஆனார்கள்.
இது குறித்து மாவட்ட துணை செயலாளர் தென்னவன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அசம்பாவிதங்களை தடுக்க மறைமலை நகரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications