பெங்களூரில் பழைய எம்எல்ஏக்களே மீண்டும் வெற்றி: தமிழர் தொகுதிகள் காங்கிரஸ் வசம்!

பெங்களூர் நகரில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன. இதில் 20 தொகுகளின் எம்எல்ஏக்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்தலில் பெங்களூர் நகரில் 58.27% வாக்குகள் பதிவாயின. 2008ம் ஆண்டு வெறும் 42% வாக்குளே பதிவாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் பெங்களூர் நகரில் 17 இடங்களில் வென்ற பாஜக, இந்த முறை 12 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. அந்தக் கட்சி 5 எம்எல்ஏக்களை இழந்துள்ளது.
அதே நேரத்தில் கடந்த முறை 8 இடங்களில் வென்ற காங்கிரஸ், இந்த முறை கூடுதலாக 5 இடங்களில் வென்று 13 தொகுதிகளைக் கைற்றியுள்ளது.
அதே போல கடந்தமுறை ஒரு இடத்தில் மட்டுமே வென்ற மதசார்பற்ற ஜனதா தளம் இந்தமுறை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில், பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் 5 இடங்களைக் கைப்பற்றினாலும், 3 இடங்களை மதசார்பற்ற ஜனதா தளத்திடம் இழந்துள்ளது.
தமிழர்கள் பெரும்பாலான அளவில் வசிக்கும் சிவாஜி நகர், சாந்தி நகர், ராஜாஜி நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொகுதிகளில் ரோஷன் பெய்க், ஹாரிஸ், தினேஷ் குண்டுராவ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications